வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு நிலை மற்றும் குளங்கள், ஓடைகளின் நிலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்கள்

1. மேலஅரசரடி ஊராட்சி மேல வேலாயுதபுரம் குளம்,

2. கீழ வேலாயுதபுரம் கண்மாய்,

3. துப்பாசுபட்டி கிராமத்தில் கடந்த ஆண்டு மழையினால் உடைப்பு ஏற்பட்ட குளங்கள் மற்றும் கண்மாய்கள்,

4. கீழ அரசரடி ஊராட்சி ஓடை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அளவுக்கு அதிகமான மழை பெய்தால் உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதையும், குளங்கள் மற்றும் ஓடைகளின் நீர்வரத்து மற்றும் கரைநிலையை தொடர்ந்து கண்காணிக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

இந்த ஆய்வில் யூனியன் ஆணையாளர் சசிகுமார், ஊராட்சி செயலர் பழனிமுருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஞானசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.