28.09.25 அன்று காலை, அழகப்பா கல்வி நிலையம் மாடியில் தூத்துக்குடியில் உள்ள புத்தக வாசிப்பு நற்பணி மன்றத்தின் புத்தகப் பார்வை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில், எழுத்தாளர் ரமேஷ் அறிவழகன் எழுதிய கிராமத்தின் எழுதுகோல் சிறுகதைத் தொகுப்பு மற்றும் எழுத்தாளர் கொற்கை அ. ஜூடின் எழுதிய காலப்பனை கவிதைத் தொகுப்பு புத்தகங்களாக எடுத்துக்கொள்ளப்பட்டது.
கல்லூரி மாணவிகள் அ. முத்து மதுமாதி, ம. மகாலெட்சுமி சிறுகதைத் தொகுப்பு குறித்தும், சான்ட்ரா மேக்ஸ் லின் மற்றும் மரிய ரேச்சல் கவிதைத் தொகுப்பு குறித்தும் தத்தமது வாசக அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர். இதன் மூலம் கலந்துகொண்ட பார்வையாளர்கள் புதுமையான வாசிப்பு அனுபவத்தை பெற்றனர்.
எழுத்தாளர் ரமேஷ் அறிவழகன் தனது எளிய மொழியில் மனநிறைவான ஏற்புரை வழங்கினார். கவுன்சிலர் அந்தோணி தனுஸ் பாலன் தலைமையிலே நிகழ்வு நடாத்தப்பட்டது. கருவூலத்துறை பணிநிறைவு செய்யது முகம்மது ஷரீப், வழக்கறிஞர் ஐ.பி. பாலசேகர் மற்றும் முனைவர் அ. அற்தோணி இரவீந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்வில் புத்தக வாசிப்பு ஆர்வலர்கள் லாரன்ஸ், மரியசந்திரக்குமார், ரமேஷ், ஹரிபிரசாத், காதைக்களம் அன்புக்குமார், அபிநய செல்லா, சுகன்யா, யுவராணி, பட்டிமன்ற பேச்சாளர் நா. மாணிக்கவாசகம், பன்முக கலைஞர் பத்மநாதன் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து சிறப்பு செய்தனர்.
மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் குமிழ்முனை புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டு, குமிழ்முனை சைமன் அறிமுகவுரை வழங்கி நிகழ்வை தொகுத்து நடத்தியார். கலையின் குரல் ப. சக்திவேல் மற்றும் புத்தக வாசிப்பு நற்பணி மன்றத்தின் பொறுப்பாளர்கள் ஆ. மாரிமுத்து, ஸ்பிக் செல்வின் மற்றும் செய்தியாளர் ரவி நிகழ்வை சிறப்புற ஏற்பாடு செய்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் புத்தக வாசிப்பு நற்பணி மன்றத்தின் சிறப்பு புத்தகப் பார்வை நிகழ்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மட்டக்கடை பகுதியில் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரடியாக ஆய்வு!!
அடுத்த
தூத்துக்குடியில் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மேயர் ஜெகன் பெரியசாமி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026