உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி முழுவதும் பல்வேறு விழாக்கள் உற்சாகமாக நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக, திரேஸ்புரம் அண்ணா சங்குகுழி தொழிலாளர் சங்கம் சார்பில் தூத்துக்குடி தினேஷ் படத்துக்கு அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அண்ணா சங்குகுழி தொழிலாளர் சங்கத் தலைவர் இசக்கிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் மெடல்களை வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து, நலிவுற்ற 250 மீனவக் குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட முக்கிய நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் துணைத் தலைவர் மாரி லிங்கம், செயலாளர் முருகையா, துணை செயலாளர் முனியசாமி, பொருளாளர் விமலசன், துணைப் பொருளாளர் மாரியப்பன், ஆலோசகர் சந்தனராஜ், கவுரவ ஆலோசகர் பேராசிரியை பாத்திமா பாபு, ஆலோசகர் சண்முகசுந்தரம், கில் நெட் படகு சங்கத் தலைவர் கணேசன், 8வது வார்டு பொறுப்பாளர் சன்னாசி, துணை செயலாளர் அகமது, முத்தரையர் நகர் தலைவர் கருப்பணன், கண்ணப்பகுல முத்தரையர் கணவாய் சங்கம் வெள்ளைச்சாமி, ஊர் செயலாளர் ராஜேந்திரன், சிலம்ப வாத்தியார் ஸ்டாலின், இருதய அரசர் சங்குகுழிச் சங்கத் தலைவர் ரெனிஸ்டன், திரேஸ்புரம் அருட்பங்கு தந்தை அமல்ராஜ், மகளிர் மீனவர் சங்கத் தலைவி மல்லிகா, பார் வலைச் சங்க செயலாளர் இசக்கிமுத்து, வணிகர் சங்க பாஸ்கர், திரேஸ்புரம் பள்ளிவாசல் தலைவர் ஷாஜகான், செயலாளர் முகமது தாஹிர், கட்டுமான தொழிலாளர் சங்கம் மின்னல் அம்சத், ராமர், 8வது வார்டு மாமன்ற உறுப்பினர் பவானி மார்சல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை செம்மைப்படுத்தினர்.
தூத்துக்குடி
அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் உலக மீனவர் தின விழாவில் மாணவச் சாதனையாளர்கள் பாராட்டு – 250 மீனவக் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சகா கலைக்குழு அசத்திய சர்வதேச பாரம்பரிய திருவிழா — திரிபுராவில் உலக நாடுகள் இணைந்து கைத்தட்டிய கொண்டாட்டம்!!
அடுத்த
குழந்தைகள் நலன் துறை மண்டல விளையாட்டுப் போட்டிகள் – காமராஜ் கல்லூரியில் சிறப்பாக தொடக்கம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026