தூய மரியன்னை கல்லூரியில் மாணவிகளால் ஆசிரியர் தினம் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டனர் முன்னதாக ஆசிரியர்களுக்கு போட்டிகள் வைத்தனர் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் அருட் சகோதரி ஜெஸி பெர்ணன்டோ துணை முதல்வர் அருட்சகோதரி எழிலரசி ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது இந்த நிகழ்வில் மாணவிகள் ஆசிரியர்கள் அனைவருக்கும் மரக்கன்று ஒன்று வழங்கினார்கள். இந்த மரக்கன்று வழங்கிய காரணத்தை மாணவிகள் நம்மிடம் கூறிய போது. இந்த ஆசிரியர் தின விழாவிற்கு ஆசிரியர்களுக்கு அன்பளிப்பாக சின்ன சின்ன செடிகளை பூத்து காய்த்து கனியாகின்ற செடிகளை நாங்கள் ஏன் கொடுத்தோம் என்றால் தரையில நட்டி, தண்ணி ஊத்தி அதை காப்பாற்றி நன்றாக உரங்கள் போட்டு பாதுகாப்பாக அதை வளர்த்து கொண்டு வந்து சமூகத்திற்கு ஒரு பெரிய மரமாக வளர்ந்து மற்றவர்களுக்கு நிழல் கொடுக்க படியாக செய்வதற்காகவும் என்றார். 
ஒரு மரமானது சின்ன சின்ன பறவைகள் பூச்சிகள் அணில்கள் அனைத்தும் மரங்களில் வந்து தங்கி பயன் பெற்று செல்வது போன்று சமூகத்திற்கு ஒரு முக்கியமான மரமாக வளர்ந்து வாழ்வது போல் நம்முடைய ஆசிரியர்களும் எல்கேஜி யில் இருந்து கல்லூரியில் படித்து முடிக்கும் வரை ஒரு ஆசிரியர் இல்லையென்றால் மாணவிகள் ஆகிய நாங்கள் கிடையாது அந்த கருத்தை மையமாக வைத்து நாங்கள் ஆசிரியர்களுக்கு நன்றிக் கடனாக இந்த மரக்கன்றை கொடுத்துள்ளோம்.
எங்கள் ஆசிரியர்கள் மாணவிகளாகிய எங்களை அரவணைத்து பாதுகாத்து அனுப்புவது போன்று எங்கள் ஆசிரியர்கள் இந்த செடிகளை அவர்கள் வீட்டில் வைத்து வளர்த்து உருவாக்க வேண்டும் என்பது எங்களது ஆசை எங்களது ஞாபகார்த்தமாக இதை வளர்க்க வேண்டும் என்றும் எங்களது ஆசை என்று செடிகளை அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கி மகிழ்ந்தார்கள் கல்லூரி மாணவிகள்.
