தூத்துக்குடி மாநகராட்சி 53வது வார்டு பகுதிக்கு உட்பட்ட தெற்கு தெருவில் குடியிருக்கும் வீடுகளில் கழிவு நீர் சுமார் ஒன்றரை வருட காலமாக கழிவுநீர் அகற்றப்படாமல் இருந்ததால் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி இருந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நேற்று (27/3/2025) காலை 11.30 மணி அளவில் தெற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பொதுமக்கள் சார்பாக புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்டத்தின் செயலாளர் மாரிச்செல்வம் மேயரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அளித்த மனு மீது பரிசீலனை செய்து இன்று (28 3/2025) காலை 10 மணி அளவில் கழிவுநீரை அகற்ற உடனே வாகன வசதிகள் செய்து இன்று ஒரு சில வீடுகளில் கழிவு நீர் அகற்றப்பட்டது.
மற்ற வீடுகளில் உள்ள கழிவுநீரை நாளை அல்லது நாளை மறுதினம் வந்து கழிவுநீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதி அளிக்கப்பட்டது.
கோரிக்கை மனு அளித்த 24 ன்கு மணி நேரத்துக்குள் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் மதுபால்ன், மற்றும் மாநகராட்சி உதவி ஆணையாளர், தெற்கு மண்டல ஆய்வாளர், மாநகராட்சி அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும், 53 வது வார்டு பகுதி மக்கள், மற்றும் புரட்சி பாரதம் கட்சியின் மாநகர் மாவட்டத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
விரைவில் 53 வது வார்டு பகுதியில் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ள தார் சாலையை சீரமைத்து புதிய தார் சாலை வசதிகள் அமைத்து தரப்படும் என்று மேயர் உறுதி அளித்து இருப்பதால் மீண்டும் ஒருமுறை 53 வது வார்டு பகுதி மக்களின் சார்பில் மேயர் மற்றும் ஆணையர் அவர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடி
கோரிக்கை மனு ஏற்பு உடனடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி!.., நன்றி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவ, மாணவிகள் - முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் வாழ்த்து!!
அடுத்த
சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026