கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு ஊராட்சிகளில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல புதிய பணிகள் இன்று தொடங்கிவைக்கப்பட்டன. இதில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
சின்னமலைக்குன்று – திப்பனூத்து
ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி தொடங்கப்பட்டது. நிகழ்வில் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், ஸ்டீபன், கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், சின்னமாரிமுத்து, இம்மானுவேல், ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளத்துரை, கிளைச் செயலாளர்கள் வேலுச்சாமி, சுரேஷ்குமார், மாடசாமி, பேரூர் கழக துணைச் செயலாளர் மாரியப்பன், வார்டு செயலாளர் சின்னப்பர், அயலக அணி அமைப்பாளர் ராமமூர்த்தி, தகவல் தொழில்நுட்ப அணி அர்ச்சனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சின்னமலைக்குன்று – நாவலக்கன்பட்டி
ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவுடைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி தொடங்கப்பட்டது. நிகழ்வில் முத்துக்குமார், ஸ்டீபன், நவநீதக்கண்ணன், சின்னமாரிமுத்து, இம்மானுவேல், வெள்ளத்துரை, கிளைச் செயலாளர்கள் கிருஷ்ணன், சுரேஷ்குமார், மாடசாமி, மாரியப்பன், சின்னப்பர், ராமமூர்த்தி, அர்ச்சனா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
குமரெட்டியாபுரம்
ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணியின் அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்வில் முத்துக்குமார், ஸ்டீபன், நவநீதக்கண்ணன், சின்னமாரிமுத்து, இம்மானுவேல், வெள்ளத்துரை, கிளைச் செயலாளர்கள் மதன்ராஜ், சுரேஷ்குமார், மாடசாமி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
மீனாட்சிபுரம்
ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்வில் முத்துக்குமார், ஸ்டீபன், நவநீதக்கண்ணன், பீக்கிலிபட்டி முருகேசன், சின்னமாரிமுத்து, இம்மானுவேல், வெள்ளத்துரை, ஜோதி செல்வராஜ், சுரேஷ்குமார், மாடசாமி, மாரியப்பன், சின்னப்பர், ராமமூர்த்தி, அர்ச்சனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் குடிநீர் வசதி மேம்பாட்டிற்கு இந்த திட்டங்கள் பெரும் பலனளிக்கும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
தூத்துக்குடி
ஜி.வி. மார்கண்டேயன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டிய குடிநீர் திட்டங்கள் – கோவில்பட்டி பகுதிகளில் வளர்ச்சி வேகத்தில்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“பாரதியார் பதிய வைத்த தீபம்—சுதந்திரக் குரல் முழங்கிய தூத்துக்குடி பாஜக விழா”
அடுத்த
உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் நடைபெற்ற கருத்தரங்கில் 7 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026