தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேலச்செக்காரகுடி மற்றும் நடுச்செக்காரக்குடி கிராமங்களில் இரண்டு நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் இருந்த தகவலை பொதுமக்களின் கோரிக்கை மற்றும் செய்திகள் மூலம் அறிந்து கொண்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகைய்யா உடனடியாக  அதிரடி நடவடிக்கை எடுத்ததின் பேரில் மின் மோட்டார் சரி செய்யப்பட்டு இரண்டு கிராமங்களுக்கும் இன்று குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது..

( 30-7-2025 நேற்று கோரிக்கை 31-7-2025 இன்று தீர்வு) மக்களின் கோரிக்கையை ஏற்று அதிரடி நடவடிக்கை எடுத்த ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் சேவகர் எம்.சி. சண்முகைய்யாவிற்கு மேலச்செக்காரகுடி மற்றும் நடுச்செக்காரக்குடி கிராம மக்கள் நன்றி கலந்த பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.