தூத்துக்குடி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மது இன்ஸ்டிடூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அன்டு ரிசர்ச் சென்டர் சார்பாக 6 வது தேசிய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்கள் மாநாடு மரு.வெ. பரத் தலைமையில் நடைபெற்றது.
நீதிபதி சேகர், மாவட்ட கல்வி ஆய்வாளர் ஓய்வு அமுதா, நேச்சுரோபதி மரு. சுபிதா, மரு. வைத்தியநாதன், மரு லக்ட்சயா, எம்.ஐ.எம்.எஸ் இயக்குநர் மரு.க. சேதுசுப்பிரமணியன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். மருத்துவர் ஆரோக்கியபழம் வரவேற்புரையாற்றினார்,
எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவத்தைப் பற்றிய புதிய புத்தகம் நீதிபதி சேகர் எம்.ஐ.எம்.எஸ், மாணவர்களின் சார்பாக வெளியிட, எம்.ஐ.எம்.எஸ் கல்வி நிறுவனத்தின் சேர்மன் மரு.வெ. பரத் பெற்றுக் கொண்டார். நீதிபதி சேகர், அமுதா பொதுநல சேவையைப் பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
பின்னர் மரு. பரத் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எம்.ஐ.எம்.எஸ் கல்வி நிறுவனமானது கடந்த 7 வருடங்களாக எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவத்தை மத்திய சுகாதாரத்துறையின் அனுமதியுடன் ஆராய்ச்சி செய்து வருகிறது.
கொரோனா தொற்று காலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவத்தில் சிகிச்சையளித்தது மட்டுமில்லாமல், பொதுமக்களுக்கு இம்யூனிட்டி பூஸ்டரும் வழங்கப்பட்டு உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது மட்டுமில்லாமல் பல்வேறு விருதுகளை பெற்றது.
இந்தியாவில் எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவத்தை சரியான பாதையில் எம்.ஐ.எம்.எஸ் எடுத்து செல்கிறது. இந்த மருத்துவத்திற்கு மத்திய மாநில சுகாதாரத்துறையில் முறையான அங்கீகாரம் கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்போம். பக்கவிளைவுகள் இல்லாத எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவம் ஆராய்ச்சியோடு மட்டுமில்லாமல் முறையான அங்கீகாரம் கிடைத்தால் பல்வேறு மக்கள் பலனடையலாம்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கும், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கவனத்திற்கும் இந்த மருத்துவத்தை பற்றி எடுத்து கூறியிருக்கிறோம். விரைவாக இந்த மருத்துவத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறோம் என்று கூறினார்.
மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலத்திலிருந்து 300 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர். முடிவில் மரு. யூசப் மௌலானா மரு. ஆம்புரோஸ் ஆகியோர் நன்றியுரை கூறினர்.
தூத்துக்குடி
கொடைக்கானலில் 6 வது தேசிய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்கள் மாநாடு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மக்களின் கோரிக்கையை ஏற்று அதிரடி நடவடிக்கை எடுத்த எம்.சி. சண்முகையா எம்எல்ஏவிற்கு செக்காரக்குடி மக்கள் நன்றி கலந்த பாராட்டு!!
அடுத்த
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு குரூஸ் பர்னாந்து பெயரை சூட்ட வேண்டும் - காங்கிரஸ் கட்சி கலெக்டரிம் கோாிக்கை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026