தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்து வின் ஃபாஸ்ட் நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலையை திறந்து வைத்தார். அதே நேரத்தில் அதன் அருகில் உள்ள தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு நிலம் கொடுத்த மக்கள் தாங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று காத்திருப்போர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் மற்றும் கிராம வருவாய்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் தெற்கு வீரபாண்டியபுரம் விரைந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தங்களுடைய கோரிக்கையை விரைவில் நிறைவேற்ற முயற்சி செய்வதாக உறுதி அளித்தார்கள்.
அதன் பேரில் தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரம், ஏ. குமரெட்டியாபுரம், ஏ. குமரகிரி மக்கள் காத்திருக்கும் போராட்டத்தை முடித்து தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். அப்போது ஸ்டெர்லைட் நில மீட்பு இயக்கத்தினுடைய மாநில தலைவர் சாமு. காந்தி அரசு அதிகாரிகளிடம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அபிவிருத்திக்காக நிலம் கையகப்படுத்திய போது நிலம் கொடுத்த மக்களுக்கு 2008 ம் ஆண்டு 80 ஆயிரம் 2010 ம் ஆண்டு 6 லட்சத்து ஐம்பதாயிரம் 2015 ம் ஆண்டு 15 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டிருக்கிறது.
ஒரே அரசாணை மூலம் 1996 ம் ஆண்டு தூத்துக்குடி சிப்காட் நிர்வாகம் 636 ஹெக்டேர் இடத்தை கையகப்படுத்தி இருக்கிறது. சிப்காட் நிர்வாகம் தன்னுடைய நிர்வாக வசதிக்காக சிப்காட் ஒன்னு அழகு தாசில்தார் மூலம் பல்வேறு நிறுவனங்களுக்கு பல்வேறு தவணைகளில் இடங்களை பிரித்து பிரித்து கொடுத்திருக்கிறார்கள். ஆனால் நிலம் கையகப்படுத்தியது ஒரே தவணையில் ஒரே அரசாணை மூலம் கையகப்படுத்தப்பட்டது. 
எனவே அனைவருக்கும் ஒரே சமச்சீரான இழப்பீடு வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கிராம மக்கள் பல்வேறு நேரங்களில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள் எனவே இந்த மக்களுடைய நியாயமான கோரிக்கையை அரசு ஏற்று உடனடியாக அனைவருக்கும் சமச்சீரான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் மாவட்ட நிர்வாகமும் தக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறி இருக்கிறது. அதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற காத்திருப்போர் போராட்டம் பேச்சு வார்த்தை அடிப்படையில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு இருக்கிறார்கள் எனவே பொதுமக்கள் நியாயமான கோரிக்கையை உடனடியாக தமிழக முதல்வர் நிறைவேற்றி தர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். 