தூத்துக்குடியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் புத்தாண்டு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. உலகெங்கும் வாழும் மக்கள் 2026ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சி அலுவலகத்தில் புத்தாண்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு மாவட்ட தலைவர் டி.எம். குழந்தைபாண்டி தலைமையேற்றார். 2026ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டு, பின்னர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எம். மேகாஸ், மாநில தொழிலாளர் அணி துணைத் தலைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட செயலாளர்கள் மாரியப்பன், மாரிச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் சௌந்தர்ராஜன், கயத்தாறு ஒன்றிய துணைச் செயலாளர் அய்யனார், பொருளாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.