தூத்துக்குடி காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் பெருமாள்சாமி தலைமையில் குரூஸ் பர்னாந்து பெயரை தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என்று கலெக்டா் இளம்பகவத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கலெக்டா் இளம்பகவத் மத்திய மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்வதாக உறுதி அளித்தார்.
     
நிகழ்ச்சியில் அகில இந்திய ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, மாநகரச் செயலாளர் இக்னேஷ்யஸ், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், ரூஸ்வெல்ட், வார்டு தலைவர்கள் சேவியர் மிசியர், சுரேஷ் குமார், சேகர், ஷேக்ஸ்பியர், மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர்  ராஜாராம், மற்றும் முத்து, கிரிதரன் உள்பட பலர் உடனிருந்தனர்.