தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் பாலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், மாரிமுத்து மற்றும் வ.உ.சி. மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்க துணைச் செயலாளர் உத்திரபாண்டி ஆகியோரின் தந்தையும், செய்தியாளர் ரேகாவின் மாமனாருமான ஆ. தங்கமணி நாடாரின் 51 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட தூத்துக்குடி ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் பாகம்பிரியாள் உடனுறை சிவன் கோவிலில் தங்கமணி நாடார் மகன்கள் செய்தியாளர்களால் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆ. தங்கமணி நாடாரின் நினைவாக தூத்துக்குடி சிவன் கோவிலில் வைத்து நடைபெற்ற அன்னதானத்தை அவரது மகள் மல்லிகா, மகன் கனகராஜ், மகள் ஜெயலெட்சுமி, மருமகன்கள் மாசிலாமணி, அஜய்கோஷ், மருமகள்கள் இலங்கைரதி, பிரேமா, ஹேமா ஆகியோர் முன்னின்று துவக்கி வைத்தனர்.
அவரது நினைவாக 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மகன்கள், மகள்கள், மருமகள்கள், மருமகன்கள், பேரன்கள், பேத்திகள் உள்பட குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.
