நகரம் முழுவதும் இரவு நேரத்திலும் ஒளிவீசும் தூத்துக்குடியை உருவாக்கும் முயற்சியில், தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு பகுதிகளில் உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திரா காந்தி சிலை சந்திப்பு, நேரு பூங்கா, ஆஷ் மெமோரியல் முன்பு மற்றும் பெல் ஹோட்டல் முதல் ரோச் பூங்கா வரை உள்ள பிரதான சாலைகளில் புதிய விளக்குகள் பொருத்தும் பணிகள் துவங்கியுள்ளன.
மொத்தம் 50க்கும் மேற்பட்ட புதிய விளக்குகள் சாலையின் எதிர்புறத்தில் ஏற்கனவே உள்ள மின் கம்பங்களில் பொருத்தப்படுகின்றன. இப்பணிகள் தரமான முறையில், விரைவாக நிறைவடைய வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பணிகள் நடைபெறும் இடங்களை நேரில் பார்வையிட்ட அவர், மின் பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒளிவீச்சு பரவல், பாதுகாப்பு, பராமரிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அவருடன் வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இணைந்து பங்கேற்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி பிரகாசிக்கிறது! — புதிய உயர்மின் கோபுர விளக்குகள் அமைப்பை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழையையும் பொருட்படுத்தாமல் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மேயர் ஜெகன்!
அடுத்த
ஜெயலலிதா இருந்தால் சி.வி.சண்முகம் அரசியலிலேயே இல்லாமல் போயிருப்பார் – அமைச்சர் கீதாஜீவன் கடும் தாக்கு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026