தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி மாணவியர்கள் சார்பில் (13.09.2025) அன்று பழைய காயல் ஊராட்சி மக்களிடம் விலங்கியல் துறை முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவிகள் மக்களின் குறைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .
நிகழ்ச்சியில் கிராமத்தில் உள்ள மக்களுக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பை, சாலை மற்றும் தெரு மின் விளக்கு அமைத்தல், கழிவு நீர் வெளியேற்றம், மழைநீர் சேகரிப்பு, போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் பழையகாயலில் உள்ள புனித அந்தோணியார் பள்ளி வளாகத்தையும் சுத்தப்படுத்தினர்.
நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர் அருட் சகோதரி ஜெஸி, செயலர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரேஸ் துணை முதல்வர் முனைவர் அருட்சகோதரி எழிலரசி சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் முனைவர் அருட்சகோதரி ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் மற்றும் உன்னத் பாரத் அபியான் (UBA) ஒருங்கிணைப்பாளர் முனைவர் புலோமின் ரெஜி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
விலங்கியல் துறை தலைவர் முனைவர் ஜோஸ்லின் பேராசிரியர், முனைவர் செல்வி ஆகியோர் வழி நடத்தினர். மாணவர்களுக்கு சமூகப் பணி மற்றும் கிராம முன்னேற்றத்தில் மதிப்பு மிக்க அனுபவத்தை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாக இருந்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி மாணவியர்கள் பழையகாயல் மக்களின் குறைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) சார்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு நடைபெற்றது!!
அடுத்த
கபடி போட்டி தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் மகளிர் கல்லூரி முதலிடம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026