தூத்துக்குடி மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில், காரைக்குடியில் நடைபெறும் மாநில அளவிலான மூத்தோர்களுக்கான தடகளப் போட்டியில் பங்கேற்கச் செல்லும் தூத்துக்குடி மாவட்ட மூத்தோர் வீரர் மற்றும் வீராங்கனைகள் வெற்றி பெற்று வருமாறு வாழ்த்தி, மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் நிறுவனத் தலைவர் அசோகன் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் செயலாளர் குப்புசாமி வீரர், வீராங்கனைகளை பாராட்டி வாழ்த்தினார்.
மாநில அளவிலான மூத்தோர் தடகளப் போட்டிக்கு 110க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளை அனுப்பி வைத்த மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் சிறப்பிடம் பெற்றுள்ளது. இந்த சிறப்பிற்குக் காரணமான மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர் பாயஸ் பாய், செயலாளர் குப்புசாமி, பொருளாளர் மெர்சி பத்மாவதி, உபத் தலைவர்கள் முனியசாமி முரளி, ராகவனந்தம், ஸ்டீபன் தியாகராஜன், ரங்கநாதன், இணைச் செயலாளர்கள் ஏஞ்சலின் கோயில் ராஜ், ஆனந்தராஜ், மாரிச்சாமி, லாரன்ஸ், ராபர்ட்சன் கென்னடி மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் வீரர், வீராங்கனைகளுக்கு தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.