தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான பொறுப்பாளராக உமா மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்த நியமனத்திற்கு தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத்திடம் பரிந்துரை செய்த தமிழ்நாடு ஐஎன்டியுசி மாநில பொதுச் செயலாளர் பெருமாள்சாமிக்கு, உமா மகேஸ்வரி சால்வை அணிவித்து நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தார்.


இந்த நிகழ்வின் போது, வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக மகிளா காங்கிரஸ் அமைப்பு முழு வீச்சில் செயல்படும் என உறுதி தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் பெண்கள் பங்கேற்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் செயல்படவும் தீர்மானிக்கப்பட்டது.