தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்கத்தின் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி பிரிவு) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர், தூத்துக்குடி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது, சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்களின் பணிநலன், பாதுகாப்பு மற்றும் சேவை தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதில் ஊர்தி ஓட்டுநர்களின் பங்கு முக்கியமானது என்பதும் எடுத்துரைக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாக அதிகாரிகள், சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்ததுடன், அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் பொறுப்புடனும் ஒழுக்கத்துடனும் சேவை செய்து வருவதை பாராட்டினர். எதிர்காலத்தில் சங்கத்துடன் இணைந்து பணியாற்ற ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். இந்த மரியாதை சந்திப்பு நல்லிணக்கமான சூழலில் நடைபெற்றது. ரா. ராஜ்குமார்
மாவட்ட செயலாளர்