தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாாிகள் தினசாி நிர்வாகத்திற்கு உதவிடும் மக்களின் பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு கானவும் செயற்கை நுன்னறிவு ஏஐ திறன் பயிற்சி அம்பேத்கர் நகாில் உள்ள ஸ்டெம் பாா்க் மினி திரையரங்கில் நடைபெற்றது.
     
பயிற்சியை தொடங்கி வைத்து  கனிமொழி எம்.பி பேசுகையில் தமிழகத்தில் அனைத்து துறைகளும் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி துவங்கி உள்ளனா். முதன் முதலில் கம்ப்யூட்டா் பாலிசி திட்டத்தை கொண்டு வந்தவா் கலைஞா் தான். இந்நிலையில் ஏஐ தொழில்நுட்பம் தற்போதைய காலக்கட்டத்திற்கு அனைவருக்கும் தேவையான ஒன்று பல்வேறு தகவல்களை இதன் மூலம் அறிந்து பின்னா் ஒரு முடிவை எடுக்க தொழில்நுட்பம் பயன்படுகிறது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஓரு ஏஐ போன்றவா் என்றார் அவா் பலாிடம் தன்னுடைய கருத்துக்களை கேட்பாா். பின்னா் அவர் ஒரு முடிவு எடுப்பாா். இதே போன்று இந்த தொழில் நுட்பத்தை எவ்வித தயக்கமின்றி அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் மாமன்ற உறுப்பினா்கள் அரசுத்துறை அலுவலா்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டால்தான் மக்கள் பணியாற்றி மக்களின் குறைகளையும் தீர்வு கண்டு நிறைவான பணிகளை நாம்மால் செய்ய முடியும். ஆனால் எவ்வளவு தொழில்நுட்பம் வந்தாலும் மனித அறிவுக்கு ஈடு இணையாகாது. இறுதியில் மனிதனுடைய முடிவுதான் இறுதியானது என்று பேசினாா்.
      
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் செயற்கை நுன்னறிவு பற்றி பயப்பட வேண்டியதில்லை. எல்லோருக்குமானது செயற்கை நுன்னறிவு பற்றிய விழிப்புணா்வு தேவை  வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் உங்களுடன் இருக்கும் குழந்தைகளுக்கும் செயற்கை நுன்னறிவு பற்றி எடுத்துச்சொல்லுங்கள் என்றாா்.

மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில் மாநகராட்சியை பொறுத்தவரை எல்லா பணிகளும் நல்லமுறையில் நடைபெற்று வரும் நிலையில் ஒரு காலக்கட்டத்திற்கேற்ப சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் நாமும் தொழில்நுட்பத்திற்கு மாறவேண்டிய நிலை வரும் போது எதிர்கால தலை முறையினா் நலன் கருதி மாறியாக வேண்டும். பிளாஸ்டிக் கோிபேக் உள்ளிட்ட மக்காத பொருட்களை யாரும் பயன்படுத்த வேண்டாம். என்று பேசினாா்.

கூட்டத்தில் ஆணையா் பிாியங்கா, துணை மேயர் ஜெனிட்டா, மண்டல த்தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, கவுன்சிலா்கள் கீதாமுருகேசன். ரெங்கசாமி, சுரேஷ்குமாா், மாநகராட்சி நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளா்கள் காந்திமதி, முனீர் அகமது. உதவி பொறியாளர் சரவணன், நகா் நல அலுவலா் சரோஜா, சுகாதார ஆய்வாளா்கள் ராஜசேகா், நெடுமாறன், ஸ்டாலின் பாக்கியநாதன், பகுதி திமுக செயலாளர் சிவக்குமாா், பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், லிங்கராஜா, பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி, அல்பட் அரசுத்துறை அலுவலா்கள் பணியாளர்க்ள மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனா்.