தமிழ்நாடு முதலமைச்சரும் கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, “என் வாக்குச்சாவடி.. வெற்றி வாக்குச்சாவடி..” என்ற வெற்றி முழக்கத்துடன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, தூத்துக்குடி மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட கூட்டாம்புளி பாகம் எண்.227 மற்றும் 228 ஆகிய வாக்குச்சாவடிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா கலந்து கொண்டு, கழக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று திராவிட மாடல் அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் பொதுமக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரிக்க தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்கொடி, ஒன்றிய துணை செயலாளர் ஏஞ்சலின் ஜெனிட்டா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சண்முக நாராயணன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி மணிகண்டன், ஒன்றிய தொழிலாளர் அணி அமைப்பாளர் மொபட் ராஜன், ஒன்றிய மாணவரணி சற்குணம், கிளை செயலாளர்கள், பாக நிலை முகவர்கள், பாக டிஜிட்டல் முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 4T ஹௌசிங் போர்டு வடக்கு குறுக்கு தெரு, KTC நகர் வட பகுதி மற்றும் KTC நகர் அழகர் கடை பகுதிகளில் சமீபத்திய மழையால் கழிவுநீர் செல்லும் பாதைகள் அடைந்து, தெருக்களில் கழிவுநீர் தேங்கி, குடிநீர் சுகாதாரமற்ற நிலையில் வருவதாக பொதுமக்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கழிவுநீர் தேங்கியுள்ள பகுதிகளில் இருந்து விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் வலியுறுத்திய அவர், வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது உதவி ஆணையர் முனீர் அஹமத், பகுதி செயலாளர் சிவகுமார், துணை செயலாளர் வேல்முருகன், வட்ட செயலாளர் தெய்வேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
“என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” முழக்கத்துடன் பூத் கமிட்டி ஆலோசனை; மழைநீர், கழிவுநீர் பிரச்சினைகளில் நேரடி ஆய்வு மேற்கொண்ட எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் “நிலையான நுகர்வு – நம் பொறுப்பும் நம் எதிர்காலமும்” விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
அடுத்த
நகர் துணைமின் நிலையப் பகுதிகளில் அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026