வரும் அக்டோபர் 20ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் வெடிகள் வெடிக்க வேண்டும் என சகா கலைக்குழு முனைவர் சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
தீபாவளி என்பது ஒளியும் ஆனந்தமும் நிறைந்த பண்டிகை என்றாலும், அதே சமயம் பாதுகாப்பை கவனிக்க வேண்டிய முக்கியமான நாளுமாகும். சிறுவர்கள் பெரியோரின் கண்காணிப்பில் மட்டுமே வெடிகள் வெடிக்க வேண்டும். மேலும், செயற்கை நாரால் செய்யப்பட்ட உடைகள் அணிவதை தவிர்த்து, பருத்தி துணி உடைகளை அணிய வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
அத்துடன், வெடிகள் வெடிக்கும் இடம் திறந்த வெளியில் இருக்க வேண்டும்; தீ பற்றக்கூடிய பொருட்களிலிருந்து தூரமாக இருக்க வேண்டும் என்றும், விபத்துகளை தவிர்க்க சுலபமான முதலுதவி பொருட்கள் வீட்டில் தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இத்தீபாவளி பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன், பாதுகாப்பாக கொண்டாடி, அன்பும் ஒற்றுமையும் நிறைந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என முனைவர் சங்கர் தெரிவித்தார்.
மேலும், அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தும் அவர் தனது வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்தார்.
தூத்துக்குடி
தீபாவளி பண்டிகையில் குழந்தைகள் பாதுகாப்பாக வெடிகள் வெடிக்க வேண்டும் – சகா கலைக்குழு முனைவர் சங்கர் வேண்டுகோள்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழைநீர் அகற்றும் பணிகள் தீவிரம் – தூத்துக்குடியில் மேயர் நேரில் ஆய்வு!!
அடுத்த
மழைநீர் அகற்றும் பணிகள் வேகமாக நடைபெறுகிறது – மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026