தூத்துக்குடி கிறிஸ்தவர்களின் முக்கிய திருவிழாவான கிறிஸ்துமஸ் விழா, அனைத்து ஆலயங்கள் மற்றும் சபைகளில் பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன் ஒரு பகுதியாக, லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை கிளைச்சபையின் 23வது ஆண்டு விழாவும், கிறிஸ்துமஸ் விழாவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பங்குத்தந்தை செல்வன் தலைமையேற்றார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, 20 சுவீகார குடும்பங்கள் உள்பட மொத்தம் 54 நபர்களுக்கு ரூ.70,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மத்திய சபைத்தலைவர் சகோதரர் ஜுட்ரன், வட்டார சபைத்தலைவர் சகோதரர் மைக்கேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.