தூத்துக்குடி தனசேகர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி மஹாலில் காங்கிரஸ் மற்றும் ஐஎன்டியூசி சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் மற்றும் காங்கிரஸ் மாநில பொதுக் குழு உறுப்பினர் பெருமாள் சாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர் அண்ணாச்சி ஜெயக்கொடி பிறந்தநாள் விழாவும், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி மகிளா காங்கிரஸ் பொறுப்பாளர் உமா மகேஸ்வரிக்கு பாராட்டு விழாவும், மேலும் 2026 ஆம் ஆண்டிற்கான காங்கிரஸ் தொண்டர்களுக்கான காலண்டர் வழங்கும் விழாவும் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், பழங்குடியினர் பிரிவு மாநில செயலாளர் முனியசாமி, மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் இக்னேஷியஸ், ஆராய்ச்சித் துறை மாவட்ட தலைவர் சிவ்ராஜ் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எஸ்.டி./எஸ்.சி. பிரிவு மாவட்ட தலைவர் ராஜாராம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் விவசாய பிரிவு பேரையா, ரூல்ஸ்வெல்ட், அத்திமரப்பட்டி சுந்தர், சுரேஷ்குமார், முருகேசன், வழக்கறிஞர் செல்வம், காமராஜ், சேக்ஸ்பியர், ஆனந்தராஜ், முத்துராஜ், பிரைன்நாத், அசனார் செல்வம், செல்வமுருகன், பாலகிருஷ்ணன், ஐஎன்டியூசி மனோகரன், சாமுவேல், மனுவேல் நெல்சன், சேகர், அகஸ்டின், செம்புலிங்கம், கோபால், கோபி, வாசிராஜன், தனுஷ், காசிராஜன், பெருமாள், மகிளா காங்கிரஸ் மாவட்ட செயலாளர் பேச்சியம்மாள், தனலட்சுமி, ஜெயஜோதி, வசந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ஐஎன்டியூசி சார்ந்த சிவலிங்கம், முத்து, ரமேஷ், பாலன் மற்றும் ஏராளமான தேசிய காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள், தொழிலாளர் நலன், மகளிர் பங்களிப்பு மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சி தொண்டர்களின் ஒற்றுமை குறித்து கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன.