தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மண்டல அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய ஜெகன் பெரியசாமி, பொதுமக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்து, அவற்றுக்கு உடனடி தீர்வுகளை வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். மக்களின் நலனே அரசின் முக்கிய குறிக்கோள் என்றும், நகரத்தின் வளர்ச்சி அனைவரின் ஒற்றுமை முயற்சியால் சாத்தியம் என்றும் அவர் கூறினார்.
முகாமில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, துணை மேயர் ஜெனிட்டா, பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ் குமார், மண்டல தலைவர் கலைச்செல்வி, மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸ்லின், எடின்டா, பேபி ஏஞ்சலின், மரிய கீதா, தனலட்சுமி, மும்தாஜ், ராமு அம்மாள், மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முகாமில் குடிநீர், சாலைகள், கழிவுநீர் வடிகால், வீடமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு, அவற்றை விரைவாக தீர்க்க அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகள் வழங்கப்பட்டன.
மக்களுடன் அரசு நேரடியாக இணையும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாம், தூத்துக்குடி மாநகராட்சி மக்கள் நல நிர்வாகத்தில் மேலும் ஒரு முன்னேற்றமாக அமைந்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் கிழக்கு மண்டல அலுவலக முகாம் – மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் நள்ளிரவில் மழைநீர் வெளியேற்ற பணிகளை மேயர் நேரில் ஆய்வு!!
அடுத்த
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் நிலங்கள் – நேரில் ஆய்வு செய்த ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026