தூத்துக்குடியில் தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு மாநாடு துவக்க விழா இன்று காலை தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. மாநாட்டிற்கு ஷீலு தலைமை தாங்கினார். பொன்னுத்தாய் வழி நடத்தினார்கள். அருள்செல்வி வரவேற்புரை ஆற்றினார்.



மஞ்சுளா, மேரி குமார் ஆகியோர் இணைந்து ஆண்டு அறிக்கை வாசித்தார்கள். ஷரிப்பா, வழக்கறிஞர் ஏ. செல்வக்குமதி, சமூக செயல்பாட்டாளர் கிரேசி பானு, நவரத்தினம் முருக சரஸ்வதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மேரி ஷீலா  நன்றி உரை நிகழ்த்தினார்.

மாநாடு துவக்க உரையில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவினுடைய மாநில தலைவர் ஷீலு  பேசும்போது நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பெண்கள் மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுப்பதனால் எந்த பலனும் இல்லை அதற்கு பதிலாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு அரசு கொடுக்க வேண்டும். படிக்கின்ற அனைவருக்கும் கட்டாயம் வேலை வழங்க வேண்டும். பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும். அனைவருக்கும் சமமான சமச்சீரான கல்வி வழங்கினால் மட்டுமே இந்த சமூகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

பெண்களுக்கு தொழில் செய்து கொடுக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் வளம் பெறுவதற்கு தமிழக அரசு பல்வேறு இடங்களில் புதிதாக தொழிற்சாலையை அமைக்க வேண்டும். தற்பொழுது தமிழக அரசு வழங்கும் ரேஷன் அரிசி மிகவும் மோசமாகவும், சுகாதாரக் கேடாகவும் இருக்கிறது. எனவே நல்ல தரமான அரிசியை இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கெமிக்கல் இல்லாத உணவு அரிசியை வழங்க வேண்டும்.

அதேபோன்று ரேஷன் கடைகள் அனைத்திலும் சிறுதானிய வகை உணவுகளை அரசு வழங்க வேண்டும். சமத்துவத்திற்கான செயல்பாட்டை துரிதப்படுத்த வேண்டும் என்று கூறினார்கள். சென்னையில் துப்புரவு தொழிலாளர்கள் 13 தினங்களாக தங்களை அரசு பணியாளராக பணியமர்த்த வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.

அவர்களுடைய போராட்டம் நியாயமானது எனவே தமிழக அரசு சென்னையில் போராடும் தூய்மை பணியாளர்களை உடனடியாக அரசு பணியாளராக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசை தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு வலியுறுத்துவதாக மாநில தலைவர் ஷீலு பேசும் போது தெரிவித்தார்.