தூத்துக்குடி கடலோர பகுதிகளில் பார்த்திகள் அமைத்து உப்பு உற்பத்தி தொழில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி புதிய துறைமுகத்தை ஒட்டி உள்ள முத்தையாபுரம் முள்ளக்காடு மற்றும் புல்லாவெளி பழைய காயல் ஆகிய பகுதிகளில் உள்ள உப்பளங்களை கையகப்படுத்தி கப்பல் கட்டும் தளம் விரிவாக்க பணி மேற்கொள்ளப்பட இருப்பதாக நில எடுப்பு துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.



இதனால் அதிர்ச்சி அடைந்த உப்பு உற்பத்தியின் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த, இதனை வெளிப்படுத்தும் விதமாக இன்று தூத்துக்குடி திருச்செந்தூர் பிரதான சாலையில் உள்ள முத்தையாபுரம் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர் காலை 9 மணிக்கு தொடங்கி பகல் 12 மணி வரை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டு உப்பளங்களை எடுக்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்து கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு உப்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் மந்திரமூர்த்தி, தலைமை வகித்தார். செயலாளர் சேகர், வரவேற்றார். பொருளாளர் பொன்ராஜ் நிர்வாகிகள் சின்னராஜ், சோட்டை சுப்பையா, முகேஷ் ஷண்முகவேல், சிவாகர், சுயம்பு நாடார், ஸ்ரீராம், பாலசுப்பிரமணியன், உள்ளிட்டார் முன்னிலை வகித்தனர்.


ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு மதசார்பற்ற ஜனதா தள மாநில துணைத்தலைவர் வக்கீல் சொக்கலிங்கம் தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது, இந்தப் பகுதியில் நாடு சுதந்திரத்திற்கு முன்பு 1937 ம் ஆண்டு முதல் உப்பு உற்பத்தி தொழில் நடைபெற்று வருகிறது. கடந்த 1974 ம் ஆண்டு முதல் கோவளம் பசுவந்தரை தன்பாடு சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் என்ற பெயரில் சங்கம் அமைத்து தொழில் செய்து வருகின்றோம்.

இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். எனவே ஒரு தொழிலை அழித்து மற்றொரு தொழிலை கொண்டு வராமல் உப்பள தொழிலை மத்திய மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பேசினார்கள். போராட்டத்தில் உப்பு உற்பத்தியாளர் சங்கங்கள், உப்பளத் தொழிலாளர் சங்கங்கள், மீன்பீடி தொழிலாளர் சங்கங்கள், வியாபாரிகள் சங்கங்கள், விவசாயிகள் சங்கங்கள், கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் ஏராளமான சமூக ஆர்வலர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முத்தையாபுரம் முள்ளக்காடு ஸ்பிக் நகர் சுற்று வட்டாரங்களில் உள்ள வியாபாரிகள் தங்கள் கடைகளை இன்று அடைத்து ஆதரவாக இருந்தனர். சங்க நிர்வாகிகள் முனிய தங்க நாடார், ராஜசேகர், தவசி வேல் சின்ன தங்கம், அர்ஜுனன், அன்ன சேகர், பொன் தனகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன், முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியன் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர். இதுபோல் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சுதாகர், ஐஎன்டியுசி தொழிற்சங்க அகில இந்திய செயலாளர் கதிர்வேல், தூத்துக்குடி நகர வர்த்தக சங்க நிர்வாகிகள் விநாயகமூர்த்தி, ஜவகர், விவசாயிகள் சங்கம் ஜோதிமணி. தமிழக வெற்றிக்கழக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல். ஜே.கே.ஆர். முருகன், சமூக ஆர்வலர் பேராசிரியை பாத்திமாபாபு, கம்யூனிஸ்ட் உப்பு தொழிலாளர் சங்கம் பொன்ராஜ், பேச்சிமுத்து, பரமசிவம், பூமயில் வக்கீல் சிலுவை நாடார் உட்பட பலர் ஆதரவாக பேசினார்கள்.

மேலும் ஐ.என்.டி.யூ.சி. மாநில செயலாளர் ராஜ், மாவட்ட காங்கிரஸ் எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் பிரபாகரன் நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் வேல்ராஜ், பாராளுமன்ற பொறுப்பாளர் ராஜசேகர், அன்னலட்சுமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி செழியன், புரட்சி பாரதம் கட்சி மாவட்டச் செயலாளர் மாரிச்செல்வம், பாண்டியபதி பரதர் நல சங்கம் பொதுச்செயலாளர் ஸ்னோஸ், காங்கிரஸ் கட்சி பிரபாகரன், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் சுடலைமணி சாமுவேல் ஞானதுரை,

எம்.சவேரியார்புரம் பங்குத்தந்தை மரிய அரசு, பொட்டல்காடு ஊர் தலைவர் ஜெய கிருஷ்ணன், புல்லாவெளி ஊர் தலைவர் மதி, பழையகாயல் உப்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் குணசீலன் உட்பட ஏராளமான அமைப்புகளில் இருந்தும் பலர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றனர்.