இஸ்லாமியர்களின் புனித மாதமான ரபீஉல் அவ்வல் மாதத்தின் 12ஆம் நாள், நபிகள் நாயகம் ஹஸ்ரத் முகமது பிறந்த தினமாக நினைவுகூரப்படுகிறது. நபியின் போதனைகளை பின்பற்றவும், வாழ்க்கையைப் போற்றவும், இந்நாள் உலகம் முழுவதும் முஸ்லிம் சமூகத்தினரால் மீலாது நபி விழாவாக கொண்டாடப்படுகிறது.
அதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகர ஜமாத்துல் உலமா சபை மற்றும் முத்தையாபுரம் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் சார்பில் மக்தப் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர ஜமாத்துல் உலமா சபை தலைவர் இம்தாதுல்லாஹ், மாவட்ட தலைவர் ஷேக் முஹம்மது, செயலாளர் சம்சுதீன், முத்தையாபுரம் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் செய்யது மரைக்காயர், செயலாளர் முஹம்மது, பொருளாளர் அப்துல் மஜித், துணை செயலாளர் சம்சுகனி, நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்யது சிராஜுதீன், அப்பாஸ், கமால்தீன், சிக்கந்தர், சம்ஜத் உசேன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் நிர்வாகிகள், சமூகத்தினர், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மீலாது விழா – அமைச்சர் கீதா ஜீவன் மாணவர்களுக்கு பரிசளிப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மேயர் ஜெகன் பெரியசாமி இரவு வடிகால் பணிகள் ஆய்வு!!
அடுத்த
புரட்சி புயல் வைகோவின் 82வது பிறந்தநாள் தூத்துக்குடியில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026