தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை, மாநகராட்சியின் 16ஆம் வார்டு கதிர்வேல் நகர் பகுதியில் நீர் தேங்கி பொதுமக்கள் கடும் அசௌகரியத்தில் தவித்தனர்.
மக்களிடமிருந்து தகவல் கிடைக்கும்போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையைக் கண்காணித்தார். மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, தேங்கிய நீரை விரைவாக வெளியேற்றும் நடவடிக்கைகள் குறித்து உத்தரவிட்டார்.
இதன்படி, தீயணைப்புத் துறை வாகனங்கள் கதிர்வேல் நகர் பகுதிக்கு அழைக்கப்பட்டு, பம்ப் செட் மூலம் மழைநீர் வெளியேற்ற பணிகளைத் தொடங்கினர். அமைச்சர் நேரடி தலையீட்டால், அந்த பகுதியில் நீர் வேகமாக வெளியேறி, மக்களிடையே நிம்மதி நிலவுகிறது.
இந்த ஆய்வின்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர் கண்ணன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ மற்றும் பலர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
மழைநீர் மக்களைக் சிரமப்படுத்தாதபடி, அமைச்சர் நேரடியாக களத்தில்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் அகற்றம்: ஆணையர் ப்ரியங்கா அதிரடி நடவடிக்கை – பொதுமக்கள் நன்றியுடன் பாராட்டு!!
அடுத்த
மழை பாதித்த மக்களுக்கு நிம்மதி – அதிவேக நடவடிக்கையில் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026