ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மற்றும் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதியபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், முத்தம்மாள் காலனி பூங்கா மற்றும் அங்கன்வாடி, முத்தம்மாள் காலனி துடிசியா, டாக்டர் செல்வராஜ் மருத்துவமனை, ஆதிபராசக்தி நகர், ராம் நகர், வெங்கடேஸ்வரா அழகர் கடை, KTC நகர் ஆரம்ப சுகாதார நிலையம், ஹௌசிங் போர்டு மற்றும் ஓம் சாந்தி நகர் உள்ளிட்ட மழைநீர் தேங்கிய பகுதிகளில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா நேரில் சென்று பார்வையிட்டார்.

மழைநீரை வெளியேற்றுவதற்காக மின் மோட்டார் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஆய்வு செய்த அவர், மேலும் மின் மோட்டார் தேவைப்படும் இடங்களில் உடனடியாக பொருத்தும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். மின் மோட்டார்கள் தடையின்றி தொடர்ந்து இயங்கும்வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நேரம் மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜேஷ்கண்ணன், பகுதி கழக செயலாளர் சிவகுமார், மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி, வட்ட செயலாளர் தெய்வேந்திரன், மாவட்ட பிரதிநிதி பூவேஷ்நாதன், அவைத்தலைவர் ராஜசேகர், பொறியாளர் அணி தர்மர், இளைஞரணி பத்மநாபன், வேல்குமார், மகளீரணி பௌஷியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.