தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பூப்பாண்டிபுரம், ஆ.சண்முகபுரம், ஆரோக்கியபுரம், பாரதி நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடரும் மழையின் காரணமாக மழைநீர் அதிகமாக தேங்கியிருந்தது.
இதை தொடர்ந்து ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு எம்.சி. சண்முகையா நேரில் வந்து ஆய்வு செய்தார். மழைநீர் அதிகமாக தேங்கிய இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதையும், விரைவில் மழைநீர் வெளியேற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தினார்.
பூப்பாண்டிபுரத்தில் தேங்கிய மழை நீரை விரைவாக வெளியேற்ற சட்டமன்ற உறுப்பினர் ஏற்பாட்டில் அதிக திறன் கொண்ட மின்மோட்டார்கள் வரவழைக்கப்பட்டு, பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆய்வில் மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் TTC. ராஜேந்திரன், மாவட்ட சுற்றுச்சூழணி அமைப்பாளர் பொன்பாண்டி ரவி, ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.ஆர். கணேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தனுஷ் பாலன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிளோமின்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், ஒன்றிய இளைஞரணி நெல்சன், தகவல் தொழில்நுட்ப அணி சின்னதுரை மற்றும் கிளை செயலாளர்கள் கதிர்வேல், முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மழைநீரில் நடந்து சென்று ஆய்வு செய்த எம்எல்ஏ நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் விரைவான நீர் வெளியேற்றத்தை உறுதிப்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது.
தூத்துக்குடி
மழை நீரில் நடந்து சென்று ஆய்வு செய்த எம்எல்ஏ – பூப்பாண்டிபுரம் முழுவதும் நீர் வெளியேற்றம் விரைவில்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழையால் நீர் தேங்கிய தூத்துக்குடி பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரம் — மேயர் ஜெகன் பெரியசாமி தொடர்ந்து கண்காணிப்பு!
அடுத்த
தூத்துக்குடியில் நள்ளிரவில் மழைநீர் வெளியேற்ற பணிகளை மேயர் நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026