தூத்துக்குடி அதிமுக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் எம்எல்ஏ ஆணையின்படி அண்ணா 117 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா உருவ சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.
    
நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் உமா கண்ணன், துணைச் செயலாளர் பழனிச்சாமி பாண்டியன், செயற்குழு உறுப்பினர் சந்திரா, மீனவர் அணி செயலாளர் வின்சென்ட், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சாமுவேல், விவசாய அணி செயலாளர் முத்துக்குமார், கலை இலக்கிய பிரிவு செயலாளர் ஜெயபால், பகுதி செயலாளர்கள் செல்லத்துரை, முத்து, மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் மகேஸ்வரன், எம்ஜிஆர் மன்ற தலைவர் மாரியப்பன், சட்டமன்ற தொகுதி இணைச் செயலாளர் வெள்ளபாண்டி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கமலக்கண்ணன் நிா்வாகிகள் மந்திரம் ராமகிருஷ்ணன் செல்வராஜ் மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர்கள் ராஜதுரை இசக்கிமுத்து பகுதி ஜெ. பேரவை செயலாளர் பொய்யாமொழி ஊராட்சி செயலாளர் முனியசாமி மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் வேலுச்சாமி கலை இலக்கியப் பிரிவு தலைவர் மகாராஜன் பகுதி எம்ஜிஆர் மன்ற தலைவர் எம்ஜிஆர் கணேசன் வட்ட செயலாளர் தனராஜ்  மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல்லா ஹாசன் மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் சபிக்குமார் உள்பட பலா் கலந்து கொண்டனர்.