தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் செப்டம்பர் 15 ம் தேதி இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு "தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் உறுதிமொழி" பிரையன்ட் நகர் பகுதி செயலாளரும், மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவரும், 45 வது வார்டு கவுன்சிலருமான ராமகிருஷ்ணன் தலைமையில் 45 வது வார்டு கட்சி அலுவலகத்தில் வைத்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திரளான 45 வது வார்டு பகுதி திமுக செயல்வீரர்கள் மற்றும் பிரையன்ட் நகர் பகுதி திமுக செயல்வீரர்கள் கலந்து கொண்டு,
"தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்!
ஓரினியில் தமிழ்நாடு குடும்பத்தில் இணைந்துள்ள 1 கோடி குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து தமிழ்நாட்டை தலைகுனிய விட விடமாட்டேன் என உறுதி ஏற்கிறோம் .
நான் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாச்சாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக போராடுவேன். "தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்" என உறுதி ஏற்கிறேன் .
நான் வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு எதிராக நிற்பேன் "தமிழ்நாட்டைத் தலைகுனியே விடமாட்டேன்" என உறுதி ஏற்கிறேன்.
நான் நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்த ஒரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன். நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காக போராடுவேன். ஒருபோதும் "தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்" என உறுதி ஏற்கிறேன் .
நான் தமிழ் மொழி பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்பிற்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் "தமிழ்நாட்டைத் தலைகுனியே விடமாட்டேன்" என உறுதி ஏற்கிறேன்.
நான் பெண்கள் விவசாயிகள் மீனவர்கள் நெசவாளர்கள் தொழிலாளர்கள் என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்க தேவையான நிதிக்காக போராடுவேன் "தமிழ்நாட்டைத் தலைகுனியே விடமாட்டேன்" என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி 45 வது வார்டில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திமுக பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் "தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்" உறுதிமொழி ஏற்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் நடைபெற்ற அமர்வு கைப்பந்து போட்டியை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து சிறப்புரை!!
அடுத்த
பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் - தூத்துக்குடி மாநகர மதிமுக சார்பில் செயலாளர் முருகபூபதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026