தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாட்டின் முக்கியமான கடலோர மாவட்டங்களில் ஒன்றாகும். 1986 ஆம் ஆண்டு அக்டோபர் 26 அன்று மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் தலைமையில், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்ட தூத்துக்குடி, இன்று தொழில், வேளாண்மை, மீன்வளம், துறைமுகம் போன்ற துறைகளில் முன்னணியில் உள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் மற்றும் ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அரசு நில ஒதுக்கீடு தொடர்பான முறைகேடுகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் ஊடகங்களிடம் கூறியதாவது:
“மறைந்த எம்ஜிஆர் தலைமையில் உருவாக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் பழனிச்சாமி காலங்களில் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் கண்டது. ஆனால் தற்போது, ஆளுங் கட்சியைச் சேர்ந்த சிலரின் செல்வாக்கில், அதிகாரிகள் அரசு புறம்போக்கு இடங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்குவதாக தகவல்கள் வெளியாகின்றன. இது கவலைக்குரியது” என்றார்.
மீளவிட்டான் பகுதி-1 மற்றும் கோரம்பள்ளம் பகுதி-2 ஆகிய இடங்களில் அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், பல ஆண்டுகளாக நில ஒதுக்கீடு கோரி வந்த ஊடகத்துறையினரின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு, பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப் படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
“இந்த முறைகேடுகள் குறித்து கலெக்டர் இளம்பகவத் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நில ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை நிலவ வேண்டும்” என முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் வலியுறுத்தினார்.
தூத்துக்குடி
புறம்போக்கு இடம் ஒதுக்கீடு குறித்த கேள்வி – தூத்துக்குடி நிர்வாகத்திடம் செல்லப்பாண்டியன் வலியுறுத்தல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இரட்டைமலை சீனிவாசனாருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மரியாதை வணக்கம்!!
அடுத்த
தூத்துக்குடி திரேஸ்புரம் பக்கிள் ஓடை முகத்துவாரத்தில் மழை முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்த மேயர்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026