மூலக்கரை வெங்கடேஷ் பண்ணையாரின் 22 வது நினைவு வீரவழிபாடு வரும் செப்டம்பர் 26 ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில், அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் தூத்துக்குடியிலிருந்து சுமார் 25க்கும் மேற்பட்ட வாகனங்களில் மூலக்கரைக்கு சென்று அஞ்சலி செலுத்த தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டம் சங்கத்தின் நிறுவனர் தலைவர் சமூக போராளி எஸ்.பி. மாரியப்பன் நாடார் தலைமையில், தூத்துக்குடி வி.இ. ரோட்டில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் லெட்சுமணன், பொருளாளர் எம்.எஸ்.டி. ரவிசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சாமுவேல்ராஜ் வரவேற்புரையாற்றினார்.

செயற்குழு கூட்டத் தீர்மானப்படி, வெங்கடேஷ் பண்ணையாரின் திருவுருவ படத்திற்கு முதலில் தூத்துக்குடி சேர்வைக்காரன்மடம் காமராஜர் சிலை அருகே, பின்னர் சின்னக்கண்ணுபுரம் மெயின் ரோட்டில், தொடர்ந்து வி.இ. ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். அங்கிருந்து வாகனப் பேரணி புறப்பட்டு மூலக்கரையில் நடைபெறும் நினைவு வீரவழிபாட்டில் பங்கேற்கும்.

இக்கூட்டத்தில் மாநில செயலாளர் தருவைக்குளம் சண்முகவேல், மாநில துணைத்தலைவர்கள் கணேசன், பாலா வேல்முருகன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் வேல்முருகன், மாவட்ட பொருளாளர் செல்வக்குமார், கன்னியாகுமரி மாவட்ட தலைவர் கணேசன், நெல்லை மாவட்ட செயலாளர் வள்ளியூர் பழனி, மதுரை மாவட்ட செயலாளர் வெற்றிவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முனீஸ்வரன், மாநகர தலைவர் ராஜா, இளைஞரணி நிர்வாகிகள் கார்த்திக், சிவா, நட்டத்தி குமார், சக்திநாராயணன், பாண்டி, பிரபு, சங்க ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் ஜெயபால், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மாநில துணைத்தலைவர் சேர்வை யோபு சாலமோன் நன்றியுரை ஆற்றினார்.