சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் அரசு சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர், நலதிட்ட நாயகன் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் தலைமை தாங்கி கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு இலவசமாக வீட்டுமனைப் பட்டாவை வழங்கினார்.

மக்களின் நீண்டநாள் கனவாக இருந்த சொந்த வீட்டின் கனவு இன்று நனவாகியதாக பலர் மகிழ்ச்சி தெரிவித்தனர். விழாவில் தாலுகா அலுவலர், அரசு அதிகாரிகள், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

திருவைகுண்டம் தொகுதியில் வீடில்லா ஏழை மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் தொடர்ந்து சென்றடைய உறுதியாக செயற்பட்டு வரும் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அவர்களின் சமூகநீதியும் மக்கள் பாசமும் அனைவராலும் பாராட்டப்படுகிறது.